வேஷம் (அத்தியாயம் -3)

விழா நிகழ்ச்சி பார்ப்பது போல டி பிளாக் பால்கனியில் ஒரே கூட்டம்.
இருவரும் விழுந்த இடத்தை சுற்றி இருந்தவர்களை வாட்சுமேன் தள்ளி கொண்டிருந்தார்.
தூரத்தில் சய்ரன் சத்தம் மெல்லமாக கேட்டது.

போலீஸ் ஜீப், கேட் திறந்திருந்ததால் உள்ளே நுழைந்தது.ஜீப் நின்றவுடன், எஸ் ஐ கதிர் வெளிப்பட்டார்.தன் தொப்பியை எடுத்து மாட்டிக் கொண்டே தன்னோடு வந்த ஏட்டுகளை பார்த்து,
ஏட்டு அங்க இருக்கிற கூட்டத்த கலைங்க, அப்டியே யார் டெட்பாடிய முதல பார்த்த ஆளுன்னு விசாரிச்சு கூட்டிட்டு வாங்க” என்றவன் election டைம்ல இந்த பிரச்சன வேற என்று தனக்குள் முனுமுனுத்து கொண்டே நெத்தியில் அடித்து கொண்டான்.

சற்று நேரம் கழித்து, ஏட்டு வாட்சுமேனுடன் வந்தார்.
ஐயா,இவன்தான் முதல்ல பார்த்திருக்கான்” என்று வாட்சுமேனை காட்டினார் ஏட்டு.
கதிர் மாரியை ஒரு முறை பார்த்துவிட்டு
“உன் பேர் என்ன”

“மாரி”

தொர சார்னு சொல்ல மாட்டிங்களோ” என்றான் கதிர்

மாரிங்க சார்

இப்ப சொல்லு,
அதுக்கு முன்னாடி ஏட்டு ஆம்புலன்ஸ்க்கு சொல்லியாச்சா” என்று கேட்டான்.

ஆச்சுங்க ஐயா

சரி, அப்படியே Forensicக்கும் சொல்லிடுங்க.

“ஆகட்டுங்க ஐயா” என்றவாறு தலை ஆட்டி கொண்டு நகர்ந்தான்.

மறுபடியும் மாரியை பார்த்து ஏதோ கேட்க நினைக்கும் போது மற்றோரு ஜீப் அப்பார்ட்மெண்டு உள்ளே நுழைந்தது.

கதிர் அந்த ஜீப்பயே பார்த்து கொண்டு இருந்தவன் திடீரென தொப்பியை சரி செய்து கொண்டான்.
ஜீப் நின்றவுடன் வெள்ளை சட்டை ஜீன்ஸ் பேன்ட் கண்ணில் கூளிங் கிளாஸ்யுடன் இறங்கினாள் ஜீவா.
சுற்றியும் பார்த்துவிட்டு, கதிரை நோக்கி நடந்தாள்.

ஹாய்! ஐ யேம் ஜீவா, கிரைம் டிடைக்டிவ் சி. பி. சி. ஐ. டி.” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கையை நீட்டினாள்.
கதிர் சற்று குழப்பத்துடன் “ஹலோ மேடம், ஐ நோ” என்றவாரே கை குலுக்கினான்.

பட் நீங்க இங்க எப்படி” என்றான்

ஒ! ஐம் ஸாரி, election டைமுங்கிறதுனால போலீஸ் டீம் பிசியா இருப்பீங்க அதான் கமிஷ்னர் இந்த கேச எங்களுக்கு மாத்தீட்டார்.நீங்க இனிஷியல் பார்மாலிட்டீஸ் முடிச்சுடிங்கன்னா ஐ வில் டேக் ப்ரம் தேர்” என்றாள்

“ஓ அப்படியா, ஒரு நிமிஷம் கன்பார்ம் பண்ணிக்கிறேன்” என்று மொபைலை எடுத்து சற்று தள்ளி நின்று பேசி கொண்டு வந்தான்.

“மேடம்,நீங்க சொன்னது சரிதான்”

ஆம்புலன்ஸ்க்கும்,Forensicக்கும் சொல்லியாச்சு.ஸ்பாட் ஸ்சேக்கியூர்டு.இனிஷியல் இன்பர்மேஷன் கேதரிங் இப்பதான் ஆரம்பிச்சேன்.”என்றான் கதிர்

ஓகே,ஸ்பாட்டை பாத்திறலாமா” என்றாள் ஜீவா.

ஓ யஸ்” என்றவாரே இருவரும் நடந்தார்கள். மாரியும் தொடர்ந்தான்.

டெட்பாடி இருந்த இடத்தை சுற்றி இருந்த கூட்டத்தை கலைத்து விட்டு ஏட்டுகள் பாதுகாப்பு வளையம் அமைத்திருந்தார்கள்.
கதிர்,ஜீவா வந்தவுடன் ஏட்டுகள் ஒதுங்கி வழிவிட்டார்கள்.
டெட்பாடி முகம் நொறுங்கி ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து திகைத்தாள் ஜீவா.
கதிர் “விக்டிம்ஷ் பத்தாவது மாடிக்கு மேல் உள்ள எதாவது ஒரு மாடியில இருந்து விழுந்திருக்க வேண்டும்.ஒன் வுமன் ஒன் பாய். போத் ஸ்பட் டெட்” என்றான்.

யு மே பி ரைட் கதிர்” என்று மேலே பார்த்தவாரு பதினான்காம் மாடியில் பறந்து கொண்டிருந்த சேலையை காண்பித்து “தட் ஸாரி மே பி ஹர்ஸ்” என்றாள்.

“யார் முதலில் பார்த்தது” என்று கதிரை கேட்ட போது ஒரு சின்ன முனுகல் சத்தம் கேட்டு பாடி இருந்த இடத்தை பார்த்து அனைவரும் அதிர்ந்தார்கள்.
Author: KavinThuligal

I am a common man who wish to share my insights which I can't give as advice but can share as opinion about real life situations in this blogs. I hope this helps someone to know that people are really good and meaningful in their thoughts about our existence.

Leave a Reply