காலை 4.30 மணி..
மொபைல் போனில் அலாரம் தான் விழித்து விட்டதை அறிவிக்க சிணுங்க அரம்பித்தது.குழலி படுக்கையில் மல்லாந்து கிடந்தாள்.அந்த பெரிய கட்டிலின் மொத்த இடத்தையும் தனக்கே சொந்தமாக்கி கொண்டு,அலாரம் சத்தம் போட்டது கூட தெரியாமல் உறங்கி போயிருந்தாள்.
காலை 5.30 மணி..
அலாரம் மறுபடியும் தன் இருப்பை பெரிய சத்தத்தோடு காட்டியது.
இந்த முறை குழலியின் தூக்கம் கலைந்தது.தன் மொபைல் போனில் மணியை பார்த்தவள் சட்டென எழுந்தாள்.நேரமாகிவிட்ட பதட்டம் அவளிடம் தெரிந்தது.
வழக்கமான காலை வேலைகளை முடித்துவிட்டு உடற்பயிற்சிக்கு தயாரானாள்.
தன் வீட்டு மொட்டை மாடியில் உடற்பயிற்சி முடித்துவிட்டு கீழே வந்தவள், மதுவின் அறையை எட்டிப் பார்த்தாள்.மது இன்னும் உறங்கி கொண்டிருந்தாள்.
ஆன்லைன் கிலாஸ் என்பதால் நிதானமாக எழட்டும் என்று எண்ணிக் கொண்டு தனக்கு தேநீர் வைத்துவிட்டு வாசல் கதவை திறந்தாள்.
வாசலில் கிடந்த அன்றைய ஆங்கில நாளிதழை எடுத்து படித்துக் கொண்டே தேநீர் குடித்தாள்.முதல் சில பக்கங்களை வேகமாக பார்த்துவிட்டு Job Classifieds பக்கத்தில் அதிக நேரம் செலவிட்டாள்.சில ஆட்கள் தேவை விளம்பரத்தில் உள்ள தொடர்பு எண்களை தன் மொபைல் போனில் சேமித்து கொண்டாள்.
மணி 8 ஆகி இருந்தது.
ஏன் இன்னும் சிவகாமி வேலைக்கு வரவில்லை என்று யோசித்தவாரே அவளுக்கு கால் செய்தாள்.மறுமுனையில் முழு ரிங் போய் முடிந்தது.மறுபடியும் இரு முறை முயற்சித்துவிட்டு அவள் கிடைக்காததால் சலித்து கொண்டு எழுந்தாள்.
சிவகாமி ஏன் வரவில்லை, மகனுக்கு உடம்பு முடியவில்லையோ?,அப்படி இருந்தால் கால் பண்ணி சொல்லி இருப்பாளே என்று தனக்குள் யோசித்து கொண்டே மது அறையை அடைந்தாள்.
“குட் மார்னிங் மது கண்ணா” என்று உள்ளே நுழைந்தவளுக்கு குழப்பம்.மது படுக்கையில் இல்லை. பாத்ருமில் பார்த்தாள் அங்கும் இல்லை. வீட்டின் எல்லா அறையும் பார்த்துவிட்டு தன் அறைக்கு வந்து பார்த்தாள்.
மது தன் காதில் headphones மாட்டிக் கொண்டு மொபைல் டேபில் கேம் விளையாடிக் கொண்டிருந்தாள்.
அதை பார்த்த குழலி சற்று எரிச்சலுடன், “மது என்ன பண்ற. “
“கேம் விளையாடறம்மா…“
“ஆன்லைன் கிலாஸ் லேட் ஆயிடும். போய் ரெடியாகு.”
குழலி சொன்னது காதில் விழாததுபோல் இருந்தாள்.
“இப்ப நான் சொல்றத கேப்பயா” என்று அதட்டினாள்.
“அம்மா நானும் தான் ஹர் கட் பண்ணணும்னு ஒன் வீக்கா சொல்றேன் நீ கேட்டய” என்றாள் கேம் விளையாடியவாரே…
தன் படுக்கையை சரி செய்து கொண்டிருந்த குழலி “கண்ணா… இந்த வாரம் போலாம் இப்ப போய் ரெடி ஆகுடா” என்றாள்.
மது குழலியை பார்த்து செல்லமாக முறைத்துவிட்டு, “இப்போ போறேன்,மறுபடியும் வருவேன்” என்றாள் கிண்டலாக
“உத வாங்க போற” என்றாள் குழலி பொய் கோபத்துடன்.
மது சட்டென டேபை சார்ஜிங் ஸ்டாண்டில் அப்படியே வைத்துவிட்டு ஓடினாள். குழலி தன் அறையை சரி செய்துவிட்டு கதவை தாளிட்டு குளிக்க சென்றாள்.
குளித்துவிட்டு வெறும் பாத் டவளை சுற்றி கொண்டு வெளிபட்டவள் கண்ணாடி முன் தன்னை பார்த்து கொண்டாள். நாம செய்யர ஒர்கவுட் நல்லா வேலை செய்து போலவே என்று எண்ணி சந்தோஷப்பட்டாள். தன் உடையை மாற்றிக் கொண்டிருந்த போது ஏதோ சத்தம் கேட்டு திடுக்கிட்டாள்.
சுற்றி பார்த்துவிட்டு எங்கே சத்தம் என்று தேடியவளுக்கு மறுபடியும் சத்தம் கேட்க திரும்பி டேபை பார்த்தாள். பக்கத்தில் இருந்த ஷாலை எடுத்து போர்த்தி கொண்டு டாபை எடுத்து ஸ்கிரினை ஆன் செய்தாள். மது விளையாடிக் கொண்டிருந்த கேம் இன்னும் ஓடி கொண்டிருந்து.
– தொடரும்
This Content is copyrighted by KavinThuligal and its author. All rights reserved. Any copy of this content may not be reproduced or stored in any presentable form without proper written permission from publisher.