ஞாயிற்றுக்கிழமை மதியம்.
அந்த அடுக்குமாடி குடியிருப்பின் வாட்சுமேன் தன் மொபைல் போனில் அரசியல் நய்யாண்டி பார்த்து சிரித்து கொண்டிருந்தான். குடியிருப்பு வாசிகள் யாரும் வெளியே காணப்படவில்லை.குழந்தைகள் பார்க்கில் கூட யாருமில்லை. திடிரென்று பெரிய சத்தம் கேட்டு வாட்சுமேன் தன் தலையை உயர்த்தி சுற்றும் முற்றும் பார்த்தவன் எதுவும் தென்படாததால் மறுபடியும் மொபைலில் முழ்கினான்.
சில நொடிகளில் மறுபடியும் பெரிய சத்தம் கேட்டது.இந்த முறை அவன் எழுந்து நடக்கலானான்.மேலே பார்த்து சத்தம் எங்கே கேட்டுருக்கும் என்று யோசித்தவாரே டி பிளாக் குடியிருப்பின் பக்கத்தில் வந்தவன் பதிநான்காம் மாடியில் ஓரு சிவப்பு நிற சேலை பறப்பதை பார்த்தான்.இது மித்ரன் சார் பிளாட் ஆச்சே.ஆனால் அங்கே பெண் யாரும் இல்லையே என்று மேலே பார்த்து யோசித்து வந்தவனின் காலில் ஏதோ தட்ட தடுக்கி முகம் தரையில் படுமாறு கீழே விழுந்தான்.
சுதாரித்து கொண்டு சுற்றி பார்தவாரே எழுந்து தன் சட்டையை சரி செய்ய கையை உயர்தியவனுக்கு அதிர்ச்சி…
கை முழுவதும் சிவப்பு நிறமாய் இருந்தது. குழப்பதில் கீழே தரையை பார்த்தால் முழுவதும் சிவப்பு நிறம்.எதோ விபரீதம் என்று எண்ணி திரும்பி பார்த்தவன். உறைந்து போனான்.
ஒரு பெண் குப்புற விழுந்து முகம் நொறுங்கி ரத்த வெள்ளத்தில் கிடந்தாள்.பக்கத்தில் சின்ன பையன் தான் போட்டு இருந்த சட்டையும் டிராயரும் ரத்ததில் நனைந்து அந்த பெண் போலவே முகம் நொறுங்கி கிடந்தான்.அவன் முகமும் சரியாக தெரியவில்லை. இருவரும் உயிரோடு இருப்பதாக அவனுக்கு தோன்றவில்லை. வாட்சுமேன் அப்படியே சிலை போல் நின்றான்.
அவ்வளவு கொடுரமாக இருந்த காட்சியை பார்த்ததால் அவன் தன் சுயநினைவிற்கு வர சிறிது நேரம் பிடித்தது.உடனே தன் மொபைலை எடுத்து 100ஐ டயல் செய்தான்.மறுமுனையில் இரு ரிங்கில் பேசும் பெண் குரல் கேட்டது.
“ஹலோ, என்ன உதவி வேண்டும்?..”
“இங்க ஒரு கொலை.. இல்ல ரெண்டு தற்கொலை..” என்று சற்று உளரியவாறு நடுக்கத்துடன் சொன்னான்…
“பதட்டபடாதீங்க முதல்ல நீங்க யார் எங்க இருந்து பேசரீங்கனு சொல்லுங்க.”
என் பேரு மாரி.Hightowers அப்பார்ட்மென்டுல வாட்சுமேனா வேலை பாக்கிறேன்.
“சரி இப்ப சொல்லுங்க என்ன ஆச்சு“
மாரி நடந்ததை சொன்னான்.
எல்லாவற்றையும் கேட்டு முடித்தவுடன் அந்த பெண் அதிகாரி, “பாருங்க மாரி போலீஸ் வர வரைக்கும் யாரும் அங்க எதையும் தொடாம பார்த்துக்குங்க.”
“சரிங்க மேடம்.”
– தொடரும்.
This Content is copyrighted by KavinThuligal and its author. All rights reserved. Any copy of this content may not be reproduced or stored in any presentable form without proper written permission from publisher.