Site icon Kavin Thuligal

சக்தி

person holding a green plant

Photo by Akil Mazumder on Pexels.com

Advertisements

கதிரவன் தன் காலை ஓட்டத்தை முடித்து விட்டு வீட்டை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான்.
அம்மு சோகமாக வாசலில் அமர்ந்து கொண்டு தான் நட்ட செடியை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன ஆச்சு அம்மு” என்று கேட்டுக் கொண்டே அவள் பக்கதில் அமர்ந்து தன் ஸ்சுவை கழட்டிக் கொண்டிருந்தான்.
பதில் எதுவும் பேசாமல் அந்த செடியையே பார்த்தபடி இருந்தாள்.
கதிரவன் வந்தது தெரிந்து குடிக்க தண்ணீரும் சுக்கு காபியும் கொண்டு வந்தவளிடம் என்ன நடந்தது என்றவாறு அம்முவை காட்டி செய்கையில் கயல்விழியிடம் கேட்டான்.

கயல்விழி என்ன என்று புரியாமல்
“என்னடா அம்மு” என்று கேட்டு கொண்டே அவளும் வாசலில் அமர்ந்து கொண்டு அம்முவை தன் மடியில் உட்கார வைத்து கொண்டாள்.
மறுபடியும் எதுவும் பேசாமல் சோகமாகவே இருந்தாள்.
கயல்விழியும் கதிரவனும் ஒருவரை ஒருவர் குழப்பமாக பார்த்து கொண்டார்கள்.

திடிரென்று “எனக்கு சாமி மேல கோவம்” என்றாள் அம்மு கதிரவனை பார்த்து.
“எதுக்காகட” என்றான் கதிரவன் திகைப்புடன்.
“நான் நட்ட செடி வாடிரிச்சுப்பா!!” என்றாள் அம்மு
“சரி அதுக்கு சாமி மேல எதுக்கு கோவம். சாமி என்னடா பண்ணுச்சு” என்றான் ஆச்சரியமாக!

“நீங்க தானப்பா சொன்னிங்க சாமி எல்லா உயிரினங்களையும் காப்பாத்தும் பாத்துக்குமுன்னு.அப்புறம் எம்ப்பா இந்த செடிய பாத்துக்கல சாமி.”
இதை கேட்ட கதிரவனும் கயல்விழியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் புன்னகைத்து கொண்டார்கள்.

கயல்விழி கதிரவனை பார்த்து “நீங்களே பதில் சொல்லுங்க உங்க பொண்ணுக்கு” என்று கூறிய எழுந்து வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.
கதிரவன் அம்முவை அழைத்து மடியில் அமரவைத்து கொண்டு சொன்னான்.

“தங்கம்!! சாமி ஒருத்தர்னால எல்லாரையும் பாத்துக்க முடியுமாட…உன்ன பாத்துக்க அம்மா குடுத்திருக்கார்ல… அதே மாதிரி நீ வெச்ச செடி நீதான் பாத்துக்கனும்ட அம்மு… அந்த சக்திய சாமி உனக்கும் கொடுத்திருக்கார்.
புரியுத தங்கம்”.
“இப்போ நம்ம இரண்டு பேரும் சேர்ந்து தண்ணி ஊத்தலாம். நாளைக்கு செடி நல்லாகிடும். சரியா” என்றான் அம்முவை முத்தமிட்டுக் கொண்டே

அம்மு கண்ணை துடைத்துக் கொண்டே சரி என்றாள்

Exit mobile version