அதிகாலை சூரியன் தன்னை உலகுக்கு காட்ட தயாராகி கொண்டிருந்தது.
விடுமுறை நாள் என்பதால் வீட்டில் அனைவரும் உறங்கி கொண்டிருந்தார்கள்.
முற்பகல் ஆகி இருந்தது, கதிரவன் முதலில் எழ முயற்சி செய்து கொண்டிருந்தான்.
சில நெலிகளுக்கு பிறகு படுக்கையின் அணைப்பில் இருந்து விடை பெற்றிருந்தான்.
வெளி முகப்புக்கு வந்தவனை பின் தொடர்ந்து அபிராமியும் கண்னை கசக்கி கொண்டு வந்தாள்.
“ஏ.. அம்மு எந்திருச்சிட்ட, லீவுதான இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம்ல” என்றான் கதிரவன் கொட்டாவி விட்டபடி.
“ம்ம்ம்…” மீண்டும் படுக்கை அறைக்கு போனாள் அம்மு.
காலைக்கடன்களை முடித்து விட்டு படுக்கை அறையை எட்டி பார்த்தான். இருவரும் இன்னும் உறங்கி கொண்டிருந்தார்கள்.
காலை சாப்பிடுவதற்காக சில பழங்களை முன்று பேருக்கும் வெட்டி வைத்து விட்டு அவனும் சாப்பிட்டான்.
வீட்டின் முன் தோட்டத்தை நோக்கி நடந்தான்.
“அப்பா” என்ற சத்தம் கேட்டு கதிரவன் திரும்பினான்.
“என்னப்பா பண்றிங்க” என்றாள் அம்மு.
“செடி நடறேன் அம்மு”.
“என்ன செடி நடுறிங்க அப்பா”
“இலுப்பை மரத்தோட நாத்துடாம்மா. இது மரமா வளரும்.”
“அப்படீனா நம்ம வீட்டு மாடி வரைக்கும் வளருமாப்பா?”
“வளரும் அம்மு”
அம்முவின் சின்ன முகம் மேலும் சின்னதானது.இதை கவனித்த கதிரவன் அம்முவை பக்கத்தில் அணைத்துக் கொண்டு கேட்டான்
“தங்கத்துக்கு என்ன ஆச்சு”
“அப்பா, இந்த மரம் பெருச வளந்துச்சுன்ன… நான் மாடில இருந்து வேடிக்க பார்க்க முடியாதுப்பா” என்றாள் சிணுங்கியவாரே
கதிரவன் உடனே சிரித்துக் கொண்டு, அம்முவிடம் எப்படி இதற்கு சமாதானம் செல்லுவது என்று முழித்துக் கொண்டிருந்தான்.
படுக்கையறையில் இருந்து இவர்களை தேடிக் கொண்டு வந்த கயல்விழி இதை கவனித்து கொண்டிந்தாள். கதிரவன் சமாதானம் செய்ய சிரமபடுவதை பார்த்த கயல்விழி அவர்கள் பக்கத்தில் சென்று அம்முவை தூக்கிக் கொண்டாள்.
“அம்மு, நாம வீடு கட்டி இருக்கம்ல இந்த இடத்துல நெரயா மரம் இருந்துச்சு அத வெட்டிட்டுதான் நாம இந்த வீட்ட கட்டுனோம்.அப்ப அந்த மரத்துல பறவைங்க கூடு கட்டி இருந்துச்சு. மரத்த வெட்டுனப்ப பறவைங்க கூடு அழிஞ்சுரிச்சு”.
“இப்ப நம் வீட்ட யாரவது இடிக்க வந்த உனக்கு எப்படி இருக்கும்” என்றாள் கயல்விழி
உடனே அம்மு “அய்யோ!! எனக்கு பயமா இருக்கும்மா
அப்படி யாரவது வருவாங்களாப்பா” என்றாள் முகத்தை சோகமாக்கி கொண்டு அழுவது போல் கதிரவனைப் பார்த்து
கயல்விழி மெல்ல புன்னகித்து விட்டு சொன்னாள், “இல்லடா அம்மு..
நம்ம வீட்ட இடிக்க வருவாங்கன்னு சொன்னதுக்கே உனக்கு இவ்வளவு கஸ்டமா இருக்குள்ள”..
“ஒரு மரம் பல உயிரினங்களுக்கு வீடுடா அம்மு. பறவைங்க இந்த மரத்துல தங்களோட கூட்ட கட்டி வீடா வாழும். இப்ப நம்ம வீடு கட்ட மரத்த வெட்டுனப்ப அந்த பறவைகளுக்கு வீடில்லாம அகியிருக்கும்ல்ல..“
“பாவம்ல்ல அப்பா” என்றாள் தலையாட்டிக் கொண்டே.
“அதுனால தான் இந்த மரச்செடி நட்டு வளர்த்த பறவைகளுக்கு மறுபடியும் வீடு கட்ட இடம் கிடைக்கும்லன்னு அப்பா செய்யிரார்.”
“அப்ப எனக்கும் ஒரு செடி குடுங்கப்பா, நானும் நட்டு வளக்கிறேன்” என்றாள் அம்மு புன்னகைத்து கொண்டே.
அருமையான பதிவு. இன்றைய சூழலில் நம் குழந்தைகளுக்கு இயற்கையின் அவசியத்தை உணர்த்த வேண்டு்ம். மனதை நெகிழ வைத்த பதிவு