ஓர் வானமாகியும் பல எல்லை வேறுபாடும் பல நிறப் பாகுபாடும் பல சிந்தனை கோட்பாடும் கொண்டது நம் பார்வை கீழ் நோக்கியதால்... மேல் நோக்கிப் பார் மனிதா வெள்ளை கூரை சொல்லும் நாம் வாழ்வது ௐர் வீடென்று ஓர் வானமாகியும் சில சமத்துவ முறையோடும் சில நாகரிக பண்போடும் சிற்சில மனித நேய உணர்வோடும் நின்றது நம் உறவை உணராததால்... உற்றுப் பார் மனிதா கரு மேக மழை சொல்லும் நாம் வாழ்வது இயற்கை கொடையென்று அதில் நாம் சமமென்று எல்லையென்றது உன்னால் தொட முடிந்த பூமிக்கே... வானை பார் தொட்டுப்பார்க்க உயர்ந்த எண்ணம் வேண்டும் வளர்த்துக்கொள் நீ உயர்வாய்.. வளர்வாய்... இயற்கை அன்போடு - மு.கவின் பிரசாத்
There are lot of topics/blogs you can get interested on to read in your valuable time.
- வேஷம் (அத்தியாயம் -3)
- வேஷம் (அத்தியாயம் – 2)
- வேஷம் (அத்தியாயம் – 1)
- India – Economic Superpower?
- மனிதம்
If you like this post and want to get notifications for future posts, Please enter your email ID and press “Follow”.
Join 98 other subscribers