“அம்மு தலைய வெளிய விடாத” என்றாள் கயல்விழி
வெளியே எட்டிப் பார்த்த அம்மு காருக்குள்ள திரும்பி
“அம்மா நாம எங்க போறோம்” என்றாள்
காரை ஓட்டிக் கொண்டிருந்த கதிரவன்
“ஊட்டிக்குடா அம்மு” என்றான் மலை வளைவுகளில் காரை மெதுவாக திருப்பியபடி
“இன்னும் கொஞ்சம் மெதுவா போங்க, வாந்தி வந்திரும் போல” என்றாள் கயல்விழி
கதிரவன் சலித்துக் கொண்டு “ஆல்ரடி லேட்டு” என்றான்
பல நாளா கேட்டு கதிரவன் இப்போதான் கூட்டிட்டு போறான்
அதுவும் அம்முவின் ஸ்கூல் சம்மர் பிராஜக்டாக place visited in this summer கட்டுரைய
சும்மா எதோ ஒரு இடத்துக்கு போன மாதிரி எழுதுறதுக்கு
அவள பக்கத்துல எங்கயாவது கூட்டிட்டு போன சந்தோசப்படுவான்னு கயல்விழி
கேட்டு கிட்டதால தான்
அம்முவுக்கு மலை பிரதேசத்துக்கு போறது இதுவே முதல் தடவை
அதனாலதான் எதோ புது உலகத்துக்கு போற மாதிரி
வேடிக்க பார்பதும், தன் அப்பாவின் மொபைலில் போட்டோ எடுப்பதுமாக
மூழ்கி போயிருந்தாள்.
அன்று முழுக்க பல இடங்களுக்கு சென்றுவிட்டு இரவு ரொம்ப லேட்டாகத்தான்
வீடு திரும்பினார்கள். அம்மு காரில் திரும்பி வரும் வழியிலேயே தூஙு்கிவிட்டாள்
மறு நாள் காலையில் எல்லோரும் முழுச்சிகவே ரொம்ப நேரம் ஆகிடுச்சு. கயல்விழியும்,கதிரவனும் மெதுவாக எந்திருச்சு தங்கள் வேலைகளை பார்த்து கொண்டிருந்தார்கள். அம்மு இன்னும் தூங்கி கொண்டிருந்தாள். கயல்விழி சமயலறையில் ஏதோ செய்து கொண்டே
“அம்மு எந்திரி!” என்று கத்தினாள்
இன்னும் ரெண்டு நாள்ல ஸ்கூல் அரம்பிச்சுடுவாங்க பிராஜக்ட முடிகணும்னு கொஞ்சமாவது பயம் இருக்கா என்று முணுமுணுத்துக் கொண்டே
மறுபடியும் “அம்மு எந்திரி!! “என்று கத்தினாள்.
சத்தம் கேட்டு அம்மு சின்னத கண்ன தெறந்து பார்துட்டு மறுபடியும் கண் மூடப் பார்த்த போது இன்னொரு சத்தம் இந்த முறை கதிரவன்.
அப்படியே கொஞ்ச நேரம் கிடந்தாள்.திடிரென எழுந்தவள் அவசர அவசரமாக காலை செய்ய வேண்டியவைகளை முடித்துவிட்டு , நடந்து ஹாலுக்கு வந்து கதிரவன் வேலை செய்து கொண்டிருந்த லேப்டாப்பை பிடுங்கி தன் பிராஜக்டை திறந்து கதிரவனிடம் பிராஜக்ட்டுக்கு உதவும்படி கேட்டாள். கதிரவன் முறைக்கவும்,சிரிக்கவும் செய்துவிட்டு சொல்ல அரம்பித்தான். அம்மு டைப் செய்தாள்.
இரண்டு மணி நேரம் கேட்டு அம்மு டைப் செய்து கட்டுரையின் முடிவை கதிரவனிடம் கேட்டாள். கதிரவன் யோசித்துவிட்டு
“Ooty is queen of Hills and mist. I wish all my friends to visit this clean & greener part of the world(பச்சை உலகம்) in their next vacation.” என்று முடித்தான்.
டைப் செய்ய ஆரம்பித்த அம்மு சற்று யோசித்தவளாக கதிரவனை பார்த்து கேட்டாள்.
“நீங்க சின்ன வயசுல ஊட்டி போனப்ப எடுத்த போட்டோ ஆல்பம் பாத்திருக்கேன்.
நேத்து ஊட்டில பார்த்த எந்த இடமும் அவ்வளவு சுத்தமவும்,கிரீனாவும் இல்லல அப்பா.கார்ல வர்றப்ப மொபைல எடுத்த போட்டோவும் பார்த்தேன்.
அப்புறம் எப்புடிப்பா ஊட்டிய இன்னும் குயின் ஆப் ஹில்ஸ்னு,கீரின் வேர்ல்டுனு எல்லாம் சொல்றங்க.
தப்பு தானப்பா?” என்றாள்.
கதிரவன் என்ன சொல்வது என்று யோசித்தவாரே மனதில் எண்ணங்களை ஓடவிட்டான்.
ஆம்,தான் சிறு வயதில் பார்த்த ஊட்டிக்கும் நேற்று பார்த்த ஊட்டிக்கும் எவ்வளவு வளர்ச்சி.மனிதனின் சுயநலனும்,பேராசையும் தான் ஊட்டி தன் அழகை இழக்க காரணம். தவறு பெயரிலோ, பெயர் வைத்தவர்களலோ கிடையாது அந்த பெயரை காப்பற்ற தவறிய நம்மிடம் தான்.
என்று சிரித்துவிட்டு பதில் சொல்லாமல் நகர்ந்தான்
முற்றும்.
Short and sweet quite be easy to read too 👌👌
அருமை அண்ணா,இயற்கை நமக்கு தந்ததை நம் வாரிசுகளுக்கு பத்திரமாக விட்டு செல்வோம்.
சிந்திக்க வைக்கும் மிகச் சிறப்பான சிறுகதை.