சொல்!! கேட்கும் காரணி காதுகளின் உணவு நா வாயின் குழந்தை உணர்வுகளின் உச்சரிப்பு மனதின் ஆயுதம் இப் பேர்பட்ட சத்தத்தை!! மனிதா! கொடுத்தால் திருப்பவும் கொட்டினால் அள்ளவும் வழியேது! மிருகத்தின் மிகுதியாம் இயற்கை ஏற்ற மனிதனின் தகுதியாம் இவையால் நாம் கேட்டே அறிவாகட்டும் அன்பே கருவாகட்டும் சொல் கொண்டு அறிவு சார்!! மனிதா! அறம் சேர்!!