மாண்புமிகு மனைவி

துணையே !

என் உறுதுணையே !

எங்கள் உயர்திணையே !

வினையே !

என் ஊழ்வினையே !

எங்கள் வாழ்வினையே !

மாற்றிய தேவதையே ! அன்பே !

நான் தேடிய வெற்றிக்கு

நீ முகவரி கொடுக்க போகிறாய்

சந்தோசம் தான் எனக்கு !

வளர வளர நீ

உயர உயர

நான் இருப்பேன் என்றும் உனக்காக !

உன் வெற்றிக்கு உயிர் கொடுக்க !

இன்றுவரை நீ கொடுத்தது

எங்களுக்கான வாழ்க்கை !

இனி நீ எடுப்பது

உனக்கான வேட்கை !

வள்ளுவனின் வாசுகி

கோவலனின் கண்ணகி

என பலர் சொன்னாலும்

பாரதி கண்ட புதுமை பெண்ணே

அழகுதான் உனக்கு !

பெருமையாய் இருக்கெனக்கு

வெறுமையின் வலியும் இருக்கெனக்கு

எதை காட்ட நான் உனக்கு !

இந்த முயற்சியில்

வென்றாலும் தோற்றாலும்

என்றும் இருப்போம்

நாங்கள் உனக்கு !

என்

மாண்புமிகு மனைவியே !

Author: KavinThuligal

I am a common man who wish to share my insights which I can't give as advice but can share as opinion about real life situations in this blogs. I hope this helps someone to know that people are really good and meaningful in their thoughts about our existence.

Leave a Reply